/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்மாதிரி இல்லமாக இடம் மாறுது கோவை சிறார் கூர்நோக்கு இல்லம்
/
முன்மாதிரி இல்லமாக இடம் மாறுது கோவை சிறார் கூர்நோக்கு இல்லம்
முன்மாதிரி இல்லமாக இடம் மாறுது கோவை சிறார் கூர்நோக்கு இல்லம்
முன்மாதிரி இல்லமாக இடம் மாறுது கோவை சிறார் கூர்நோக்கு இல்லம்
ADDED : பிப் 19, 2025 10:28 PM

கோவை ; சிறார் கூர்நோக்கு இல்லம், ரூ.12 கோடி செலவில் கொடிசியா அருகே புதிதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடும், 18 வயதுக்குட்பட்ட சிறார்களை நல்வழிப்படுத்த, மாவட்ட தலைநகரங்களில் சிறார் கூர்நோக்கு இல்லங்கள் செயல்படுகின்றன. இங்கு மாணவர்களுக்கு கைத்தொழில்கள், தேவையான கல்வி வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் சந்திப்பில் சிறார் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. 1938ம் ஆண்டு முதல் இந்த இல்லம் செயல்பட்டு வருகிறது. சிறார் நீதிமன்றமும் இதே வளாகத்தில் அமைந்துள்ளது. தற்போது, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 22 பேர் இங்கு உள்ளனர்.
இல்லத்தில், அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாக, தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன. போதிய பாதுகாப்பு இல்லாததால், 2011ம் ஆண்டு பாதுகாவலரை தாக்கி, 16 சிறார்கள் தப்பினர்.
தீவிர தேடுதலில் அவர்கள் பிடிபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
சிறார்களுக்கான நூலகம், விளையாட்டு பயிற்சி ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில், இந்த கூர்நோக்கு இல்லம், இங்கிருந்து இடமாற்றம் செய்யப்படுகிறது.
'பூஞ்சோலை எனும் திட்டத்தின் கீழ், புதிய கூர்நோக்கு இல்லம், ரூ.12 கோடி செலவில், கொடிசியா அருகே, 2.6 ஏக்கர் பரப்பில் கட்டப்படவுள்ளது. இதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்மாதிரி கூர்நோக்கு இல்லமாக, புதிதாக கட்டப்பட உள்ள இல்லம் இருக்கும். இங்கு வரும் சிறார்களை நல்வழிப்படுத்த சிறப்பு பயிற்சிகள், மனவளக்கலை மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
'கூர்நோக்கு இல்லத்தை இடமாற்ற அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளது. நிதி ஒதுக்கப்பட்டதும், பணிகள் துவங்கும்' என்று, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.