/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து துணை கமிஷனர் பணியிட மாற்றம்
/
போக்குவரத்து துணை கமிஷனர் பணியிட மாற்றம்
ADDED : ஜன 27, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தமிழகம் முழுவதும் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 11 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கோவை மாநகரில் போக்குவரத்து துணை கமிஷனராக பணிபுரிந்து வந்த ராஜராஜன், திருப்பூர் வடக்கு சட்டம் - ஒழுங்கு துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநகர வடக்கு துணை கமிஷனராக பணிபுரிந்து வந்த சந்தீஷ், கடந்த ஜன., 7ம் தேதி ராமநாதபுரம் எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். காலியாக இருந்த அவரது இடத்திற்கு தற்போது, சென்னை அண்ணா நகர் துணை கமிஷனராக பணிபுரிந்து வந்த ரோகித் நாதன் ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.