தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் 'டேப்ஸ்' வேண்டும்: ஏ.ஐ.டி.யூ.சி.,

 போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் 'டேப்ஸ்' வேண்டும்: ஏ.ஐ.டி.யூ.சி.,

 போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் 'டேப்ஸ்' வேண்டும்: ஏ.ஐ.டி.யூ.சி.,


ADDED : ஜன 06, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை. தமிழ்நாடு போக்குவரத்து கழக 'எம்பிளாயிஸ் பெடரேஷன்' ஏ.ஐ.டி.யூ.சி., சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆறுமுகம் கூறியிருப்பதாவது:

அரசு துறையில் பணியாற்றிய தொழிலாளர்கள், போக்குவரத்து கழகங்களில் அயல் பணியாளர் ஆக பணிபுரிந்து வந்தனர். ஓய்வூதியம் மறுக்கப்பட்டது. ஏ.ஐ.டி.யூ.சி., நடத்திய போராட்டத்துக்கு பிறகு, 7000 தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இப்போதும் பெற்று வருகின்றனர்.

பெரும்பாலான தொழிலாளர்களின் விருப்புரிமை அடிப்படையில் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு, 1.28 லட்சம் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாக அது மாறியது. இது, 2001 முதல் 2003 வரை அ.தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்டு, மீண்டும் அமலானது.

2003ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தான் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஓய்வூதிய திட்டம் அரசின் பரிசீலனைக்கு பிறகு, பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்றப்படும் என, ஊதிய ஒப்பந்தத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

இப்போது, அரசு பணியாளர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் அமல்படுத்திட வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us