ADDED : ஆக 23, 2025 02:43 AM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம், கோவை சுங்கம் பணிமனையில் நான்கு நாட்கள் நடந்தது.
மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பத்மநாபன் பேசுகையில், ''புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியதாரருக்கு முழுமையான டி.ஏ., உயர்வு வழங்க வேண்டும். 25 மாதமாக வழங்காமல் உள்ள ஓய்வு பெற்றவரின் பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச பென்ஷனாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும். காலியாக உள்ள, 25 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும்,'' என்றார்.
கோவை அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மண்டல தலைவர் லட்சுமி நாராயணன், பொதுச் செயலாளர் வேளாங்கன்னிராஜ், அருணகிரி, சுரேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
