/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் சூழ்ந்த ரோட்டில் பயணிப்பது பெரும் பாடு
/
புதர் சூழ்ந்த ரோட்டில் பயணிப்பது பெரும் பாடு
ADDED : பிப் 22, 2024 11:17 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட, தேவராயபுரம் ஊராட்சி, சென்றாம்பாளையத்தில் இருந்து தேவராயபுரம் செல்லும் ரோட்டில், நாள்தோறும் ஏராளமான வாகன ஓட்டுநர்கள் பயணிக்கின்றனர். இந்த ரோட்டை பெரும்பாலும் விவசாயிகளே பயன்படுத்துகின்றனர்.
ரோட்டின் இருபக்கமும் அதிகளவு ஆள் உயரத்துக்கு செடிகள் வளர்ந்து, புதர் போல் ரோட்டை ஆக்கிரமித்துள்ளது. இதனால், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.
மேலும், ரோட்டில் முன் செல்லும் வாகனங்களை முந்தி செல்லவும், எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதிலும் சிரமம் நிலவுகிறது. இதனால், இந்த ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இப்பகுதியில் மின் விளக்கு வசதியும் இல்லை. இந்த ரோட்டில், இரவு நேரத்தில் செல்ல பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி ரோட்டின் ஓரத்தில் உள்ள புதர்களை அகற்றி, மின்விளக்கு வசதி ஏற்படுத்த, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், ஒன்றிய நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.