/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஒன்வே'யில் பயணம்; தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
/
'ஒன்வே'யில் பயணம்; தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
'ஒன்வே'யில் பயணம்; தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
'ஒன்வே'யில் பயணம்; தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
ADDED : ஜன 26, 2025 11:50 PM

நடைபாதையில் குப்பை
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் உள்ள நடைபாதையில், அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளதால், அவ்வழியில் செல்லும் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
- ரவிகுமார், கிணத்துக்கடவு.
வேகத்தடை அமைக்கணும்!
கிணத்துக்கடவு, கோதவாடி பிரிவில் ரோட்டின் ஒரு பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் தாறுமாறாக செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, வாகன வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடையை முழுமையாக அமைக்க வேண்டும்.
-- கோகுல், கிணத்துக்கடவு.
'ஒன்வே'யில் பயணம்
கோவில்பாளையத்தில் இருந்து, பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பல வாகனங்கள் 'ஒன்வே' திசையில் பயணிப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, 'ஒன்வே' வழித்தடத்தில், வாகனங்கள் இயக்குவதை கட்டுப்படுத்த வேண்டும்.
-- ஜீவா, கோவில்பாளையம்.
தடுப்புகள் அமைக்கணும்!
நெகமம் நாகர் மைதானம் செல்லும் ரோட்டின் ஓரத்தில், கால்வாய் அருகே தடுப்புகள் இல்லாததால், பைக் ஓட்டுநர்கள் இரவு நேரத்தில் செல்ல சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க இங்கு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ராஜ்குமார், நெகமம்.
தெருநாய்கள் தொல்லை
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, 24வது வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் பொதுவெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். முதியோர், குழந்தைகள் ரோட்டில் செல்லும் போது, தெருநாய்களால் பாதிக்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில், தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--- சிவக்குமார், பொள்ளாச்சி.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, வெங்கடகிருஷ்ணா ரோட்டில் குப்பைக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. கழிவுகள் மழைநீரில் தேங்கி மிகுதியான துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. அப்பகுதி முழுவதும் அசுத்தமாகி உள்ளது. குப்பை கொட்டும் இடமாக இருப்பதோடு, திறந்த வெளிக்கழிப்பிடமாகவும் மாறிவிட்டது.
- ஜெயமோகன், உடுமலை.
சேதமடைந்த ரோடு
உடுமலை, சரவணா வீதி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாவதுடன், பழுதடைந்துவிடுகிறது. பொதுமக்கள் அப்பகுதியில் நடந்து செல்வதற்கும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் முதியவர்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தடுமாறி விழுகின்றனர்.- முத்துலட்சுமி, உடுமலை.
மக்கள் அச்சம்
உடுமலை, அனுஷம் ரோட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. வாகன ஓட்டுநர்களை நீண்ட துாரம் துரத்தி சென்று அவர்களை அச்சுறுத்துகிறது. குழந்தைகளை அப்பகுதியில் அழைத்து செல்ல முடியாத வகையில் தெருநாய்கள் கூட்டமாக உலாவிக்கொண்டிருக்கின்றன. மேலும், இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்துவதால் பலரும் விபத்துக்குள்ளாகின்றனர்.
- செந்தில், உடுமலை.
நடைபாதை சேதம்
உடுமலை பைபாஸ் ரோட்டில், நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நடைபாதை பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. இதனால், மக்கள் நடந்து செல்லும் போது அதில் விழுந்து காயமடையும் வாய்ப்புள்ளது. எனவே, நடைபாதையை சரிசெய்ய நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.
கனரக வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை-பொள்ளாச்சி ரோடு தீயனைப்பு துறை அலுவலகம் அருகே கனரக வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. ரோட்டில் வரும் மற்ற வாகனங்கள் இடதுபுறம் ஒதுங்கி செல்வதற்கு வழியில்லாமல் தடுமாறி விபத்துகள் நடக்கிறது. நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
- தேவராஜ், உடுமலை.

