/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் ஆடையின்றி ஓடியவருக்கு சிகிச்சை
/
சாலையில் ஆடையின்றி ஓடியவருக்கு சிகிச்சை
ADDED : ஜன 28, 2025 11:46 PM
கோவை; ஆர்.எஸ்.புரம் பகுதியில், ஆடையின்றி ஓடிய வடமாநில நபரை, பொது மக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, ஆர்.எஸ்.புரம் பகுதியில், மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த நேரத்தில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், திடீரென தான் அணிந்து இருந்த ஆடைகளை கழற்றி விட்டு, சாலையில் சத்தம் போட்டபடி ஓடினார். இதைப்பார்த்து பலர் முகம் சுளித்தனர்.
இதைப்பார்த்த, அப்பகுதியில் இருந்தவர்கள், அந்த நபரின் இடுப்பில் துணியை சுற்றி விட்டு, அப்பகுதியில் இருந்த ஒரு கம்பத்தில் கட்டி வைத்தனர்.
தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த நபரை மீட்டு,கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசார் அவரிடம் விசாரிக்க முயற்சித்தனர். ஆனால் அவரால் பேச முடியவில்லை. அவர் கையில் 'வாசிம்' என பச்சை குத்தப்பட்டிருந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சிகிச்சை முடிந்த பிறகு, அவரை காப்பகத்தில் அனுமதிக்க முடிவு செய்தனர்.