/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரம் ஏறும் தொழிலாளி ரத்த வாந்தியெடுத்து பலி
/
மரம் ஏறும் தொழிலாளி ரத்த வாந்தியெடுத்து பலி
ADDED : ஜன 20, 2025 06:57 AM
போத்தனூர்: கோவை, போத்தனூர், பஞ்., ஆபீஸ் வீதியை சேர்ந்தவர் லிங்கன், 69. நேற்று இவரது வீட்டிற்கு ஒரு பெண் மற்றும் குழந்தையுடன் வந்த ஒருவர், தென்னை மரம் சுத்தம் செய்து தருவதாக கூறியுள்ளார்.
இவர் அனுமதித்ததும் முதல் மரத்தில் ஏறி சுத்தம் செய்தார். தொடர்ந்து அடுத்த மரத்தில் ஏறியவர், பாதியிலேயே கீழிறங்கினார். ரத்த வாந்தி எடுத்து, சிறுநீர் கழித்தவர், மயங்கிச் சரிந்தார்.
அதிர்ச்சியடைந்த உடனிருந்த பெண் சத்தமிட்டார். அருகேயிருந்தோர் சென்று பார்த்தபோது, அந்நபர் உயிரிழந்திருப்பது தெரிந்தது. போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில், உயிரிழந்தது ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்த முருகன், 42 என்பதும் உடன் வந்தது மனைவி பழனியம்மாள்,40, மகன் சக்திவேல், 3 என்பதும், முருகன் மதுப்பழக்கமுடையவர் எனவும் தெரிய வந்தது.
சடலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. சுந்தராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.