/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகள் மீது மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு
/
வீடுகள் மீது மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு
ADDED : ஜன 15, 2026 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர், சாமன்னா வாட்டர் ஹவுஸ் அருகே, மரம் முறிந்து விழுந்ததில், 2 வீடுகள் சேதமடைந்தன.
சாமன்னா வாட்டர் ஹவுஸ் பகுதியில், குடியிருப்புகளை சுற்றி பழமையான மரங்கள் அதிகளவில் உள்ளன. மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து, சாரல் மழை பெய்து வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பழமையான மரம் ஒன்று, நேற்று அதிகாலை முறிந்து, அருகில் இருந்த இரண்டு வீட்டின் மேல் விழுந்தது. இதில் வீடுகளின் மேல்பகுதி சேதமடைந்தன. வீட்டில் யாரும் குடி இல்லாததால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ---

