/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறநிலையத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி
/
அறநிலையத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி
ADDED : அக் 26, 2025 11:18 PM

அன்னுார்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நடப்பாண்டில் கோவில் நிலத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, அன்னுாரில் சின்ன அம்மன், பெரிய அம்மன் கோவிலுக்கு சொந்தமாக 14 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை இந்து சமய அறநிலையத்துறை கோவை சரக இணை ஆணையர் ரமேஷ் துவக்கி வைத்தார்.
'கோவை சரகத்தில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் பலன் தரும் மரங்கள் நடும் பணி தொடர்ந்து நடைபெறும்,' என இணை ஆணையர் தெரிவித்தார். இதில் நாட்டு ரகங்களான பாதாம், வேம்பு, புளி, புங்கன், இலுப்பை உள்ளிட்ட ஆறு ரகங்களை சேர்ந்த 500 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது.
அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சிவசங்கரி, பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார், அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கர், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்,

