sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுவாணி ரோட்டில் மரம் வெட்டி அகற்றம்

/

சிறுவாணி ரோட்டில் மரம் வெட்டி அகற்றம்

சிறுவாணி ரோட்டில் மரம் வெட்டி அகற்றம்

சிறுவாணி ரோட்டில் மரம் வெட்டி அகற்றம்


ADDED : மார் 09, 2024 10:40 PM

Google News

ADDED : மார் 09, 2024 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்;மாதம்பட்டியில், மேற்கு புறவழிச்சாலை முதல் பேக்கேஜ் பணிக்காக, சிறுவாணி ரோட்டோரம் இருந்த புளிய மரங்கள் வெட்டப்பட்டன.

கோவை மாவட்டம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, புறநகரில் பாலக்காடு ரோடு, மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை, 32 கி.மீ., தூரத்திற்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்று பேக்கேஜ்களாக பணிகள் பிரிக்கப்பட்டு, 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், முதல் பேக்கேஜில், மைல்கல் முதல் மாதம்பட்டி வரை, 11.80 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாதம்பட்டி, சிறுவாணி மெயின் ரோட்டில், மேற்குபுறவழிச்சாலை கடக்கிறது. இதற்காக, சிறுவாணி மெயின் ரோட்டோரம் இருந்த, 2 புளிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. வளர்ச்சிப்பணிகளுக்காக அகற்றப்படும் மரங்களுக்கு இணையாக, புதிதாக மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us