/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
/
பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : பிப் 04, 2024 10:15 PM

ஆனைமலை:ஆனைமலை அருகே கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 'கோவையில் ஒரு கோடி' எனும் அமைப்பு மற்றும் பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவியரின் வீடுகளில் மரங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சிவப்பிரியா வரவேற்றார்.
கோவையில் ஒரு கோடி அமைப்பைச்சேர்ந்த நிர்வாகிகள் பாபு, காமராஜ், லோகேஸ், ருத்ரா ஆகியோர் மகாகனி, பெரு நெல்லி, மலைவேம்பு, சரக்கொன்றை, சிறு நெல்லி போன்ற மரக்கன்றுகளை தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் மாசிலாமணி ஆகியோர் பள்ளி வளாகத்தில் நடவு செய்தனர்.
முதுகலை ஆசிரியர் சிவக்குமார் நன்றி தெரிவித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் பிரபாகரன் மற்றும் அர்த்தநாரீஸ்வரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

