UPDATED : மே 16, 2026 10:29 PM
ADDED : மே 16, 2026 10:22 PM

அ நிறம் | அளவு
கோவை:மாநகராட்சி 50வது வார்டு, உடையாம்பாளையம் அருகே ராம்கார்டன் பகுதி உள்ளது. அங்கு மே பிளவர் மற்றும் மரமல்லி ஆகிய 2 மரங்கள் அனுமதியில்லாமல் வெட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழை காரணமாக அந்த மரங்கள் சாய்ந்திருந்ததாக பொது மக்கள் மாநகராட்சி நிர்வாகத்தில் புகாரளித்தனர். அந்தப் புகாரில் அவர்கள் மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர். மழை காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட தாசில்தாரின் அனுமதியுடன் தான் மரம் வெட்ட வேண்டும் என்று, மாநகராட்சி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்' என்றனர்.
