/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டி சாலையில் மரங்கள் விழுந்தது; ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
ஊட்டி சாலையில் மரங்கள் விழுந்தது; ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி சாலையில் மரங்கள் விழுந்தது; ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி சாலையில் மரங்கள் விழுந்தது; ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 04, 2024 10:22 PM
மேட்டுப்பாளையம்; குன்னூர் மலைப்பகுதியில், ஊட்டி சாலையில் இரண்டு இடங்களில், மரங்கள் குறுக்கே விழுந்ததால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, குன்னூர் மலைப்பகுதி வழியாக, சாலை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள், இந்த சாலை வழியாக குன்னூர், ஊட்டி, கூடலூருக்கு சென்று வருகின்றன. தற்போது குன்னூர் அங்கு, மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை, 7:00 மணியளவில், ஊட்டி சாலையில், கல்லாறு அருகே, குன்னூர் மலைப்பாதையில், முதல் மற்றும் இரண்டாவது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே, சாலையின் குறுக்கே மரங்கள் சரிந்து விழுந்தன.
அதேபோன்று பர்லியாறு அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் இந்த சாலை வழியாக, போக்குவரத்து தடைபட்டது. உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு அதிகாரி பாலசுந்தரம் தலைமையில், தீயணைப்பு பணியாளர்களும், மேட்டுப்பாளையம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். இவர்கள் பொக்லைன் இயந்திரம் வாயிலாக, சாலையின் குறுக்கே கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் பின் போக்குவரத்து சீரானது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.