/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரடி தாக்கி பழங்குடியின தம்பதி படுகாயம்
/
கரடி தாக்கி பழங்குடியின தம்பதி படுகாயம்
ADDED : மே 29, 2025 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை : கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது காடம்பாறை. இங்குள்ள கருமுட்டி செட்டில்மென்டை சேர்ந்த பழங்குடியின தம்பதி சிவமுத்து, 52, தங்கம்மாள், 52, ஆகியோர், காடம்பாறை செல்ல காலை, 7:00 மணிக்கு நடந்து சென்றனர்.
அப்போது, எதிரே குட்டியுடன் வந்த கரடி, திடீரென இருவரையும் தாக்கிவிட்டு, வனப்பகுதிக்குள் சென்றது. இருவருக்கும், வாய், கழுத்து, தலை பகுதிகளில், படுகாயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ், இருவருக்கும் ஆறுதல் கூறி, தலா 10,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கினார்.