/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக - கேரள எல்லையை கடக்கும் பழங்குடியின மக்கள்... ஆபத்தான பயணம்; கொடுங்கரை பள்ளத்தில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
/
தமிழக - கேரள எல்லையை கடக்கும் பழங்குடியின மக்கள்... ஆபத்தான பயணம்; கொடுங்கரை பள்ளத்தில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
தமிழக - கேரள எல்லையை கடக்கும் பழங்குடியின மக்கள்... ஆபத்தான பயணம்; கொடுங்கரை பள்ளத்தில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
தமிழக - கேரள எல்லையை கடக்கும் பழங்குடியின மக்கள்... ஆபத்தான பயணம்; கொடுங்கரை பள்ளத்தில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : டிச 31, 2024 07:47 AM

மேட்டுப்பாளையம்: தமிழக -- கேரள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்பட, கோபனாரியில் உள்ள இருமாநில எல்லை இடையே, கொடுங்கரை பள்ளத்தில் மேம்பாலம் அமைக்க பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்த தோலம்பாளையம் அருகே கோப்பனாரி மலை கிராமம் உள்ளது.
தமிழக-கேரள எல்லை ஓரம் உள்ள இந்த கிராமத்தைச் சுற்றி பட்டிசாலை, சீங்குலி, ஆலங்கண்டி, ஆலங்கண்டிபுதூர், காலனி புதூர், செங்குட்டை, மூனுக்குட்டை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன.
பழங்குடியினர்
இவற்றில் 2000க்கும் மேற்பட்ட இருளர் இன பழங்குடியினர் குடும்பங்கள் வசிக்கின்றன. அதே போல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மன்னார்காடு, கோட்டத்துறை, அட்டப்பாடி, முக்காலி, மட்டத்துகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோபனாரி அருகில் வாழ்ந்து வருகின்றனர். தமிழக - கேரள மாநிலத்தின் எல்லைப்பகுதி என்பதால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு இரு மாநில மக்களுக்கும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருந்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து தினமும் சுமார் 300 டன் காய்கறிகள், வாழை தார்கள் கோப்பனாரி எல்லை வழியாக கேரளா மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. தமிழக பகுதியான கோபனாரி கிராமத்தையும், கேரள பகுதியான மட்டத்துகாடு நடுவில் கொடுங்கரை பள்ளம் உள்ளது. இந்த பள்ளம் தான் இரு மாநில எல்லைகளையும் இணைக்கிறது.
ஆபத்தான முறை
வருடத்தின் அனைத்து நாட்களிலும் இதில் தண்ணீர் செல்கிறது. மேம்பாலம் இல்லாததால் பள்ளத்தில் ஆபத்தான முறையில் தண்ணீரில் வாகனங்கள் செல்கின்றன. மக்களும் நடந்து கூலி வேலைக்கு செல்கின்றனர்.
பெரும்பாலும் குறைந்தளவு நீரே இப்பள்ளத்தில் செல்வதால், இரு மாநில மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்களும், வியாபாரிகளும், இப்பள்ளத்தை ஆபத்தான முறையில் வாகனங்கள் வாயிலாகவும், நடந்து சென்றும் கடக்கின்றனர்.
இந்நிலையில், மழைக்காலங்களில் இப்பள்ளத்தில் நீர் வரத்து அதிகமாகிவிடுவதால், தொடர்ந்து இந்த பாதையை உபயோகப்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. இதன் காரணமாக இருமாநிலங்களிடையே போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.
இதுகுறித்து கோபனாரி மக்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து தர இருமாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கிராமங்கள் வனத்துறை பகுதியில் உள்ளதால் பாலம் கட்ட அனுமதி வாங்குவதில் சிரமம் உள்ளது.
மாவோயிஸ்ட்கள் வந்து செல்லும் பாதை என்பதால், இங்கு மேம்பாலம் கட்ட இருமாநில அரசுகளும் முன்வருவதில்லை. மேம்பாலம் கட்டினால் தமிழக கேரள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.----