/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றிட திட்டத்தில் நிவாரணம் வேண்டும் பழங்குடியினர் காத்திருப்பு போராட்டம்
/
மாற்றிட திட்டத்தில் நிவாரணம் வேண்டும் பழங்குடியினர் காத்திருப்பு போராட்டம்
மாற்றிட திட்டத்தில் நிவாரணம் வேண்டும் பழங்குடியினர் காத்திருப்பு போராட்டம்
மாற்றிட திட்டத்தில் நிவாரணம் வேண்டும் பழங்குடியினர் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 22, 2024 04:53 AM

கூடலுார்: முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, மாற்றிட திட்டத்தின் கீழ் வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி, பழங்குடி மக்கள் கூடலுாரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம்; முதுமலை ஊராட்சி பகுதியில் வசித்து வரும், பழங்குடியினர் மற்றும் மவுட்டாடன் செட்டி மக்களை மாற்றிடம் திட்ட மூலம், வனத்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.
இத்திட்டத்தில் பழங்குடியினருக்கு, மாநில அரசு உரிய நிவாரணம் வழங்க கோரி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில், முதுமலை நுழைவு வாயில் பகுதியான போஸ்பாராவில் நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கமலாட்சி தலைமை வகித்தார். அதில், 'அரசின் மாற்றிட திட்டத்தின் கீழ் வெளியேற்றப்பட்ட பழங்குடிகள், மவுண்டாடன் செட்டி மக்களுக்கு நிவாரண தொகையாக, 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்; பழங்குடி மக்களுக்கு வழங்கிய நிவாரண தொகையில் முறைகேடு செய்து ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; வன உரிமை அங்கீகாரம் சட்டம், 2006 ன் கீழ் அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, பழங்குடியின மக்களிடம், கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார், டி.எஸ்.பி., செல்வராஜ், தாசில்தார் ராஜேஸ்வரி, உதவி வன பாதுகாவலர் கருப்பையா பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், 'கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேசி முடிவெடுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.