ADDED : டிச 07, 2025 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க.,வினர், அவரது உருவப்படத்திற்கு திதி கொடுத்து, மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி உட்பட ஏராளமான அ.தி.மு.க.,வினர், மவுன ஊர்வலத்தில் பங்கேற்றனர். கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர். ஏராளமான அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.

