/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செக்கு இழுத்த செம்மல் வ.உ.சி.க்கு புகழஞ்சலி
/
செக்கு இழுத்த செம்மல் வ.உ.சி.க்கு புகழஞ்சலி
ADDED : செப் 08, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவையில், வ.உ.சி., பிறந்த தினத்தை முன்னிட்டு,கோவை சிறையில் அவர் இழுத்த செக்கிற்கு இ.கம்யூ., மாவட்டச் செயலாளர் சிவசாமி, இ.கம்யூ., மாநில பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் மலர் மாலை அணிவித்து,புகழஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில பொருளாளர் ரமணி தலைமை வகித்தார். 'இஸ்கப்' நிர்வாகி சுப்பிரமணியம், வ.உ.சி.சுதந்திர போட்ட காலத்தில் செய்த தியாகங்கள் குறித்து உரையாற்றினார்.
இஸ்கப் மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் சாந்திசந்திரன் உள்ளிட்ட 50க்கு மேற்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.