/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மில் தொழிற்சங்க தியாகிக்கு அஞ்சலி
/
மில் தொழிற்சங்க தியாகிக்கு அஞ்சலி
ADDED : ஜூலை 08, 2025 11:49 PM
கோவை; கோவையில் இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., சார்பில், பஞ்சாலை தொழிற் சங்க தியாகி முத்துவின், 71ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கோவை உப்பிலி பாளையத்தில் உள்ள தியாகி முத்துவின் நினைவிடத்தில். இரு கம்யூ., கட்சியினரும் ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து. அஞ்சலி செலுத்தினர். இ.கம்யூ., கொடியை மா.கம்யூ., பீளமேடு நகர செயலாளர் மேகநாதனும், மா.கம்யூ., கொடியை இ.கம்யூ., கிழக்கு மண்டல செயலாளர் சண்முகமும் ஏற்றினர்.
தியாகி முத்துவின் மகன் தங்கவேல் தலைமையில், பொதுக்கூட்டம் நடந்தது. எழுத்தாளர் எஸ்.பாலச்சந்திரன் துவக்க உரையாற்றினார். இ.கம்யூ., மாவட்டத் துணைச் செயலாளர் குணசேகர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், மா.கம்யூ., மத்திய குழு உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர்.