/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி
/
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி
ADDED : ஜூன் 22, 2025 11:24 PM
அன்னுார்:துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அன்னுாரில் நடந்தது.
விவசாய மின் இணைப்புகளுக்கு, மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் 55ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி அன்னுார் பயணியர் மாளிகை முன் நடந்தது.
கொங்கு இளைஞர் பேரவை (தமிழ்நாடு) நிறுவனர் குமார ரவிக்குமார், உயிர்நீத்த தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். விவசாயிகளின் ஒற்றுமை குறித்து நிர்வாகிகள் பேசினர்.
போராட்டத்தில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தி மவுனம் அனுஷ்டிக்கப்பட்டது. விவசாயிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 'நமது நிலம், நமதே' அமைப்பின் செயலாளர் ராஜா, கொங்கு இளைஞர் பேரவை அன்னுார் மையத் தலைவர் சத்தியமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.