/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஹல்காம் தாக்குதல் பலியானோருக்கு அஞ்சலி
/
பஹல்காம் தாக்குதல் பலியானோருக்கு அஞ்சலி
ADDED : ஏப் 26, 2025 12:46 AM

போத்தனூர்; காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா பயணியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடந்தது.
பா.ஜ., சுந்தராபுரம் மண்டல் தலைவர் முகுந்தன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.,ரோகிணி, பா.ஜ., தே.மு.தி.க., கட்சியினர், சமூக ஆர்வலர் நூர்முகமது உட்பட, 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
* கோவை மாவட்ட பா.ஜ., அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின், ரத்தினபுரி மண்டல் சார்பில், சிவானந்தா காலனியில் நடந்த நிகழ்ச்சியில், தீபங்கள் ஏற்றியும் மலர்களை துாவியும், புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

