/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
/
காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
காஷ்மீர் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 24, 2025 10:49 PM

வால்பாறை; காஷ்மீரில், பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில், இறந்தவர்களுக்கு வால்பாறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காஷ்மீர், பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், சுற்றுலாபயணியர் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வால்பாறையில் நடந்தது.
வால்பாறை பா.ஜ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மண்டல் தலைவர் செந்தில்முருகன், மண்டல் பார்வையாளர் தங்கவேல் ஆகியோர் தலைமையில், அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதே போல், வால்பாறை தாலுகா ஹிந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் லோகநாதன், நகர தலைவர் சதீஸ் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் ரவீந்தரன் மற்றும் ஹிந்துமுன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.