/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
/
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 28, 2025 10:44 PM
பொள்ளாச்சி, ; காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு பா.ஜ.,வினர் அஞ்சலி செலுத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா சென்ற அப்பாவி பொதுமக்கள், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி கைகாட்டியில், தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் நடந்தது.
ஒன்றியத்தலைவர் கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அரசு தொடர்பு மாவட்டத்தலைவர் வெள்ளைச்சாமி, முன்னாள் ஒன்றிய பார்வையாளர் கேசவமூர்த்தி, முன்னாள் ஒன்றியத்தலைவர் சத்தியநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், பங்கேற்றவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, பலியானவர்களின் ஆத்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தினர்.

