/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரினிட்டி கண் மருத்துவமனை சிங்காநல்லூரில் கிளை துவக்கம்
/
டிரினிட்டி கண் மருத்துவமனை சிங்காநல்லூரில் கிளை துவக்கம்
டிரினிட்டி கண் மருத்துவமனை சிங்காநல்லூரில் கிளை துவக்கம்
டிரினிட்டி கண் மருத்துவமனை சிங்காநல்லூரில் கிளை துவக்கம்
ADDED : ஜூலை 13, 2025 11:29 PM

கோவை; டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை, 2வது புதிய கிளையை கோவை சிங்காநல்லுாரில் துவக்கியுள்ளது. புதிய கிளையை கோவை மேயர் ரங்கநாயகி திறந்துவைத்தார்.
மருத்துவமனையின் தலைமை டாக்டர் ஸ்ரீதரன் கூறியதாவது:
மருத்துவமனைக்கு, தமிழகம், கேரளாவில் 9 கிளைகள் உள்ளன. சிங்காநல்லுாரில், 6,500 சதுர அடியில் அமைந்துள்ள புதிய மருத்துவமனை, கண் பரிசோதனை, மருந்தகம், அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உள்ளது.
இதில் ஜெனரல் ஆப்தால்மாலஜி, கண்புரை, குளூக்கோமா, மெடிக்கல் ரெட்டினா, லேசிக், கார்னியா சிகிச்சை, குழந்தைகள் கண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. துவக்கவிழாவை முன்னிட்டு, ஆக., 15ம் தேதி வரை, அனைவருக்கும் இலவச ஆலோசனையும், 100 நபர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சையும், 400 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடியும் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு, அவர்கூறினார்.
நிர்வாக இயக்குநர் டாக்டர் சுனில் ஸ்ரீதர், போலீஸ் கமிஷனர்சரவண சுந்தர், இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை செயலாளர் டாக்டர் சீதாராமன், தலைமை மருத்துவ இயக்குநர் டாக்டர் மிருதுளா சுனில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.