/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழிப்பறி திருடர்கள் இருவர் மீது 'குண்டாஸ்'
/
வழிப்பறி திருடர்கள் இருவர் மீது 'குண்டாஸ்'
ADDED : ஜூலை 13, 2025 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வழிப்பறியில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
கோவை மாவட்டம், அன்னுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில், தேனி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளைப்பாண்டி, 23, மாரிமுத்து, 29 ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையை ஏற்று, கோவை கலெக்டர் அதற்கான உத்தரவை வழங்கினார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவர் மீதும், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்ததற்கான உத்தரவு வழங்கப்பட்டது.