/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிற்பயிற்சி நிலையத்தில் முப்பெரும் விழா
/
தொழிற்பயிற்சி நிலையத்தில் முப்பெரும் விழா
ADDED : செப் 07, 2025 09:13 PM

வால்பாறை; வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆசிரியர் தின விழா, ஓணம் பண்டிகை, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா, முதல்வர் நடராஜ் தலைமையில் நடந்தது. இளநிலை பயிற்சி அலுவலர் வெங்கடேஷ் வரவேற்றார்.
ஆசிரியர் தினத்தையொட்டி, மாணவ, மாணவியர் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதே போல் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், வால்பாறை அரசு மருத்துவமனை டாக்டர் ராஜசேகரன் பேசும் போது, 'தொழில் கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல முறையில் படித்து, உயர்ந்த நிலையை அடைய வேண்டும். பெண்கள் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
வைரஸ் காய்ச்சல் பரவாமல் தவிர்க்க குடிநீரை நன்கு காய்ச்சியபின் குடிக்க வேண்டும். படிக்கும் வயதில் மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி, வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது. உயர்வான சிந்தனைகள் மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்து, திறம்பட படித்து, வாழ்க்கையை வளமானதாக்கி கொள்ள வேண்டும்,' என்றார்.
விழாவில், பயிற்சி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.