/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
த.வெ.க., 2ம் ஆண்டு விழா; இனிப்பு வழங்கி உற்சாகம்
/
த.வெ.க., 2ம் ஆண்டு விழா; இனிப்பு வழங்கி உற்சாகம்
ADDED : பிப் 03, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; த.வெ.க., துவங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஆண்டு விழாவை கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் கட்சி துவங்கி ஓராண்டு நிறைவடைந்தது. இதனையடுத்து கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழா, வால்பாறை நகர கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.
நகர தலைவர் ஆண்ட்ரூஸ் கட்சிக்கொடியேற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர். நகர செயலாளர் செய்யதுஅலி, பொருளாளர் லோகேந்திரன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

