ADDED : ஏப் 04, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; வக்ப் வாரிய திருத்த மசோதா, 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் அதிகாலை நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து, தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) சார்பில் நேற்று சுந்தராபுரம் சங்கம் வீதியில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி கோஷமிட்டனர்.
எஸ்.டி.பி.ஐ. மற்றும் சில முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களுடன், 25 பெண்கள் உள்பட, நூற்றுக்கும் மேற்பட்டோர், மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் பங்கேற்றனர்.