/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார நிலையம் அருகே தேங்கும் கழிவு நீரால் அவதி
/
சுகாதார நிலையம் அருகே தேங்கும் கழிவு நீரால் அவதி
ADDED : ஜூலை 28, 2025 09:20 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆச்சிபட்டி சர்வீஸ் ரோட்டில் கழிவு நீர் செல்வதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஆச்சிபட்டி சர்வீஸ் ரோடு அருகே ஏராளமான குடியிருப்புகள் மற்றும் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இவ்வழியை அதிகப்படியான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
மேலும், இந்த ரோட்டில் ஆங்காங்கே கழிவு வழிந்தோடுவதால், மக்கள் இவ்வழியில் செல்ல சிரமப்படுகின்றனர். கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுசுகாதாரம் பாதிக்கிறது. இதனால் அப்பகுதியில் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது.
இதே ரோட்டில், அரசு துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இதனால், உடல் உபாதைகளுடன் வரும் மக்களுக்கு, மேலும், உடல் நல குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி ரோட்டில் கழிவு நீர் செல்லாதவாறும், வடிகாலில் வசதி ஏற்படுத்தியும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.