/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தில் ஒளிராத மின்விளக்குகளால் அவதி
/
மேம்பாலத்தில் ஒளிராத மின்விளக்குகளால் அவதி
ADDED : ஜூன் 11, 2025 09:41 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு மேம்பாலத்தில் மின்விளக்குகள் முழுமையாக ஒளிராததால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், கிணத்துக்கடவு மேம்பாலத்தில் அதிகப்படியான வாகனங்கள் செல்கின்றன.
இதில், இரவு நேரத்தில் மேம்பாலத்தில் இருக்கும் மின்விளக்குகள் முழுமையாக ஒளிராமல் உள்ளது. இதனால், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் அதிகளவு தடுமாறுகின்றனர்.
மேம்பாலத்தில் ரோட்டோர தடுப்புகள் உயரம் குறைவாக இருப்பதால், இரவு நேர பைக் ஓட்டுநர்கள் வேகமாக செல்லும் போது, நிலைத்தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்விளக்குகளை பராமரித்து, முழுமையாக எரியும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.