/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
த.வெ.க., பூத் கமிட்டி மாநாடு பணி 'விறு விறு'
/
த.வெ.க., பூத் கமிட்டி மாநாடு பணி 'விறு விறு'
ADDED : ஏப் 23, 2025 11:22 PM

அன்னுார்,; தமிழக வெற்றிக் கழக கோவை மண்டல பூத் கமிட்டி மாநாட்டு பணி பூமி பூஜையுடன் துவங்கியது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் பூத் கமிட்டி நிர்வாகிகளின் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
முதல் கட்டமாக, 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் கோவை மண்டல பூத் கமிட்டி மாநாடு, கோவை -- - சத்தி சாலையில், குரும்பபாளையத்தில் உள்ள, எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடைபெற உள்ளது. 26ம் தேதி ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்களும், 27ம்தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டு பணி நேற்று துவங்கியது. அரங்கத்தின் வளாகத்தில் பூமி பூஜை நடைபெற்றது. வேள்வி உடன் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத்குமார் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், மேடை, கார்பெட், அலங்கார விளக்குகள், அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடக்கிறது. பணிகளை வேகமாக முடிக்க, மாவட்ட நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் அறிவுறுத்தினார்.

