/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் நிலையில் கழிவுகள் கொட்டிய லாரி; நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

ADDED : மே 21, 2025 11:48 PM

சூலுார்; 'சூலுார் அருகே நீர் நிலையில் கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் செயல்படும் நிறுவனத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி கொண்டு வந்த லாரி, அருகில் உள்ள நீர் நிலையில் கொட்டியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர். மின்னல் வேகத்தில் லாரி அங்கிருந்து சென்று விட்டது. உடனே, சூலுார் தாசில்தார், சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடத்தில் பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,' தனியார் நிறுவனத்தில் இருந்து அடிக்கடி கழிவுகளை கொண்டு வந்து நீர்நிலைகளில் கொட்டி வருகின்றனர்.
இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. பலமுறை கூறியும் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவு, தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து கழிவுகளை கொட்டுகின்றனர். அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.