/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாகாளியம்மன் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்
/
மாகாளியம்மன் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்
ADDED : ஜன 11, 2025 09:28 AM
சோமனூர், : ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலுக்கு புதிதாக அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சோமனூர் அடுத்த ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பழமையானது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்த கோவிலுக்கு அறங்காவலர்கள் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட அறங்காவலர் குழுவுக்கு அனுப்பப்பட்டன. அக்குழுவின் தீர்மானத்தின்படி, மூன்று பேர் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக பரிந்துரைக்கப்பட்டனர்.
அதன்படி செம்மாண்டாம் பாளையத்தை சேர்ந்த சின்னசாமி, கரவழி மாதப்பூரை சேர்ந்த அனிதா, தொட்டிபாளையத்தை சேர்ந்த குமார் ஆகியோரை அறங்காவலர்களாக நியமித்து அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் இரண்டு ஆண்டு காலம் பொறுப்பு வகிப்பார்கள்.