/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி
/
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி
ADDED : செப் 20, 2024 10:21 PM
மேட்டுப்பாளையம் : 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை, காரமடை போலீசார் நேற்று போக்சோவில் கைது செய்தனர்.
காரமடை அருகே 15 வயது சிறுமி தனது பெற்றோர் உடன் வசித்து வருகிறார்.
9ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். சிறுமியை ஊட்டியை சேர்ந்த மோனிஷா மற்றும் பல்லடத்தை சேர்ந்த தர்மராஜ் ஆகியோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றனர்.
இதில் விருப்பம் இல்லாத சிறுமி, தனது தோழி வாயிலாக சைல்டு ஹெல்ப் லைன்க்கு போன் செய்து உதவி கேட்டார்.
இதையடுத்து, கோவை மாவட்ட குழந்தைகள் உதவி மைய அதிகாரி பரமேஸ்வரி 27, காரமடை போலீசாருடன் சென்று சிறுமியை மீட்டார். பின், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற மோனிஷா 23, தர்மராஜ் 23, ராஜதுரை 30, கீதா 25, மற்றும் பவானி 24, ஆகியோரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.