/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுாரில் சுரங்க நடைபாதை திறப்பதில்லை; ரயில் ரோட்டை கடப்பதால் விபத்து அபாயம்

ADDED : டிச 03, 2024 09:07 PM

சூலுார்; சூலுார் ரயில்வே ஸ்டேஷனில், ஆபத்தான முறையில், ரயில் ரோட்டை கடக்கும் பயணிகளால், விபத்து நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சூலுார் அடுத்த முத்துக்கவுண்டன் புதுாரில் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இந்த ஸ்டேஷன் வழியே தினமும், 40 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. பாலக்காடு - திருச்சி ரயில், கோவை - நாகர்கோவில் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.
இந்நிலையில், இங்குள்ள ரயில் ரோட்டை, பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். சுரங்க நடைபாதை இருந்தும் ஆபத்தான வகையில் ரயில் ரோட்டை கடப்பதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''ரயில் ரோட்டை கடக்க சுரங்க நடைபாதை உள்ளது. ஆனால், பல மாதங்களாக திறக்காமல் பூட்டியே கிடக்கிறது. அதனால், பள்ளி மாணவ, மாணவியர் முதல் அனைவரும் ரயில் ரோட்டை கடந்து தான் மறுபுறத்துக்கு செல்கின்றனர். ரயில்வே நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் சுரங்க நடைபாதையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.