ADDED : ஏப் 27, 2026 10:17 PM
காரமடை: கோவை மாவட்டம் காரமடை அருகே வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் மருதப்பன், 59. கட்டட தொழிலாளி. இவர் கடந்த 25ம் தேதி, வெள்ளியங்காடு பகுதியில் கட்டட வேலை செய்திருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக கருதப்பட்டு, அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து, காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரமடை போலீசார் கூறுகையில், மருதப்பனின் பிரேத பரிசோதனை அறிக்கைப்படி, அவர் மாரடைப்பால் இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று, அவர் மிகவும் உயரமான ஏணி ஒன்றை தூக்கி வைத்துள்ளார். அப்போது திடீரென மயக்கமடைந்தார். இதில் பார்த்த சிலர் ஏணி மின் கம்பிகளில் உரசியது என தவறாக புரிந்துக்கொண்டனர், என்றனர்.
---
