ADDED : ஏப் 04, 2026 08:03 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. வேட்பாளராக கனிமொழி சந்தோஷ் போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், கவுண்டம்பாளையம் தொகுதியில் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும். எதிரிகள் குறித்து கண்டு கொள்வதில்லை. நோக்கம் எல்லாம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்,'' என்றார்.
