தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரியர்

ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரியர்

ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரியர்


ADDED : மே 17, 2025 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2025 01:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:கோவை, ராமநாதபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் இரட்டைச் சகோதரிகள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

பிறப்பில் துவங்கி, பள்ளிக்கல்வி வரையிலான பல பயணங்களில் ஒன்றாக செயல்பட்டு வந்த மாணவியர் கவிதா, கனிகாவின் வெற்றிப்பயணம், 10ம் வகுப்பு பொதுத்தேர்விலும் தொடர்ந்தது.

இருவரும் கணித பாடத்தில் ஒரே மதிப்பெண்கள் பெற்றதுடன், மொத்த மதிப்பெண்களும் ஒருசேர எடுத்திருக்கின்றனர். கவிதா தமிழில்,- 95, ஆங்கிலம், 98, கணிதம், 94, அறிவியல், 89, சமூக அறிவியல், 98 என, 474 மதிப்பெண் எடுத்துள்ளார். கனிகா தமிழ், 96, ஆங்கிலம், 97, கணிதம், 94, அறிவியல், 92, சமூக அறிவியல், 95 என, 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மாணவியர் கூறுகையில், 'ஒரே மதிப்பெண் வரும் என எதிர்பார்க்கவில்லை. பள்ளி பருவத்தேர்வுகளில் கவனக்குறைவால், நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை.

'பொதுத்தேர்வை கவனத்துடன் எழுதினோம். கணிதம் கடினமாக இருந்தது. நாங்கள் நன்றாக படித்து பெற்றோருக்கு உறுதுணையாக இருப்போம்' என்றனர்.

கைதிகள் ஆல்பாஸ்


சேலம் மத்திய சிறையில், 25 கைதிகள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தனர்.

அதில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் கோபி, 412, கோவிந்தராஜ், 372, முத்து, 366 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தேர்ச்சி பெற்ற கைதிகளை, சிறை எஸ்.பி., வினோத், சிறை ஆசிரியர்கள் பாராட்டினர்.

கண்டக்டர் மகள்


தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் - சத்யா தம்பதி. இவர்களுக்கு விக்னேஷ் என்ற ஒரு மகனும், சோபியா என்ற மகளும் உள்ளனர். வெங்கடேசன் கும்பகோணம் போக்குவரத்து கழக கண்டக்டராக உள்ளார்.

சோபியா, அரியலுார் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். சோபியாவை, போக்குவரத்து கழக பொது மேலாளர் முத்துக்குமாரசாமி நேற்று நேரில் சென்று பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us