/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளத்தில் மூழ்கி இரட்டையர்கள் பலி
/
குளத்தில் மூழ்கி இரட்டையர்கள் பலி
ADDED : நவ 03, 2025 01:44 AM

பாலக்காடு: பாலக்காடு அருகே, குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரர்கள் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் சித்துார் அணிக்கோடு பகுதியை சேர்ந்த காசிவிஸ்வநாதனின் மகன்கள் இரட்டையர்களான ராமன், 14, லட்சுமணன், 14. அருகில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து, கோவிலுக்கு சென்ற இருவரையும் காணவில்லை. உறவினர்கள் போலீசில் புகார் அளித்து தேடி வந்தனர்.
இதற்கிடையில், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள சிவன் கோவில் குளத்தில், ராமன் உடல் மிதந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள், தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சேர்ந்து நடத்திய தேடுதலில் லட்சுமணன் உடலையும் மீட்டனர்.
இருவரின் உடலும் சித்துார் தாலுகா மருத்துவமனையில் பிரேத படுசோதனைக்காக அனுப்பப்பட்டன. நீச்சல் தைரியாத இருவரும், மீன் பிடிப்பதற்காக குளத்தில் இறங்கிய போது தவறி விழுந்திருக்கலாம் என வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் சித்துார் போலீசார் தெரிவித்தனர்.

