சி.டி.சி.ஏ. கிரிக்கெட்டில் 3 விக்கெட் எடுத்த இருவர்
சி.டி.சி.ஏ. கிரிக்கெட்டில் 3 விக்கெட் எடுத்த இருவர்
UPDATED : அக் 25, 2026 05:26 PM
ADDED : அக் 25, 2026 05:24 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில் 6வது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி. உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது.
டி ஸ்குவேர் சாம் அகாடமி அணியினர் 46.3 ஓவரில் 174 ரன் எடுத்தனர். அருண் பாலா சாகர் 53, ஹரிபிரசாத் 43 ரன் எடுத்தனர். எதிரணியின் ஹரிஸ் மூன்று விக்கெட் வீழ்த்தினார். சீஹாக்ஸ் யுனைடெட் கிரிக்கெட் கிளப் அணியினர் 35 ஓவரில் 134 ரன் எடுத்து தோல்வியடைந்தனர். ஹரிஸ் 37 ரன் எடுக்க, எதிரணியின் கோகுல், ரோசன் குமார் ஆகியோர் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.
