ADDED : பிப் 01, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
கோவை: மதுரை, மேலாசக்குடியை சேர்ந்த மலைச்சாமி,39, ராஜ்குமார்,31, ஆகியோர் சேர்ந்து வாரச்சீட்டு நடத்தி வந்தனர். அப்போது, சின்னத்தடாகம்,செங்கல்சூளையில் வேலை செய்த மதுரை, மேலாசக்குடியை சேர்ந்த மூக்கனை தொடர்பு கொண்டு, வாரச்சீட்டில் சேருமாறு கூறினர்.
மூக்கன் மற்றும் அவருடன் வேலை செய்த 50 பேர் சீட்டில் சேர்ந்து, வாரந்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தினர்.
மொத்தம், 50 வாரம் பணத்தை வசூலித்து விட்டு திருப்பிகொடுக்காமல் ஏமாற் றினர். மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, தலைமறைவாக இருந்த இருவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
