ADDED : ஏப் 03, 2026 07:44 PM

சூலுார்: கண்ணம்பாளையத்தில், வெள்ளை முனியப்பன் கோவிலை இடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சூலுார் அடுத்த கண்ணம்பாளையம் --- கலங்கல் ரோட்டில், பழமையான வெள்ளை முனியப்பன் கோவில் இருந்தது. கடந்த, 30ம் தேதி நள்ளிரவு, மர்ம நபர்கள் கோவிலை இடித்து தரைமட்டமாக்கி விட்டு தப்பினர். அதிர்ச்சியடைந்த பக்தர்கள், சூலுார் போலீசில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு காமிரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். ஊட்டி அண்ணா காலனியை சேர்ந்த பொக்லைன் ஓட்டுனரான விஜய் 25, மேட்டூர் கருங்கலூரை சேர்ந்த பிரபு, 32 ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில், தொழிலதிபர் ஒருவர், கோவிலை இடித்து அந்த இடத்தை சுத்தம் செய்ய கூறியதாகவும், அதனால், பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்ததாகவும், போலீசாரிடம் இவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
