/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது..
/
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது..
ADDED : செப் 27, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்: கோவில்பாளையத்தில், சிறுவனிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவில்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், நேற்று முன்தினம் கோவில்பாளையம் மெயின் ரோட்டில் நண்பர் சுபாஷ் உடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் சிறுவனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவனிடம் இருந்து மொபைல் மற்றும் 1150 ரூபாயை பிடுங்கிக்கொண்டு நால்வரும் தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார், கோவில்பாளையத்தை சேர்ந்த நந்தகுமார், 21. கணேசபுரத்தைச் சேர்ந்த ராகுல், 19. ஆகிய இருவரை கைது செய்தனர்.