/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவியரை படம் எடுத்த இருவர் கைது
/
மாணவியரை படம் எடுத்த இருவர் கைது
ADDED : அக் 06, 2025 11:21 PM
கோவை:ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவியர், ராமலிங்கம் ரோட்டில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை வகுப்பு முடிந்ததும், அப்பகுதியில் இருந்த பழரச கடைக்கு, மாணவியர் சென்று விட்டு விடுதிக்கு திரும்பினர். அவர்களை இருவர் பின்தொடர்ந்து சென்று மொபைல்போன்களில் படம் எடுத்தனர்.மாணவியர், நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் சாலமனிடம் தெரிவித்தனர். அவர், புகைப்படம் எடுத்தவர்களிடம் கேள்வி எழுப்பினார். அவர்கள் சாலமனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின்படி, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து, மாணவியரை புகைப்படம் எடுத்த, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்நால், 29, ராஜுகண்ணா, 32 ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இருவரும், டி.பி.ரோட்டில் உள்ள உணவு விடுதியில் தங்கி பணிபுரிவது தெரிந்தது.