/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நள்ளிரவில் சிக்கன் கேட்டு தகராறு இருவர் கைது; ஒருவருக்கு வலை
/
நள்ளிரவில் சிக்கன் கேட்டு தகராறு இருவர் கைது; ஒருவருக்கு வலை
நள்ளிரவில் சிக்கன் கேட்டு தகராறு இருவர் கைது; ஒருவருக்கு வலை
நள்ளிரவில் சிக்கன் கேட்டு தகராறு இருவர் கைது; ஒருவருக்கு வலை
ADDED : ஜூலை 06, 2025 03:10 AM
கோவை : சரவணம்பட்டி பகுதியில், இரும்புக்கடை ஊழியர்களை கத்தியால் குத்தி விட்டு, தப்பிய நபரை போலீசார் தேடுகின்றனர்.
சரவணம்பட்டியை சேர்ந்தவர்கள் ஹேம்நாத், 25 மற்றும் பிரசன்னா, 25. இருவரும் சரவணம்பட்டி - துடியலுார் ரோட்டில் உள்ள இரும்புக்கடையில் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் மது அருந்தினர். நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், சரவணம்பட்டி - துடியலுார் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்று சிக்கன் கேட்டுள்ளனர்.
ஓட்டல் ஊழியர்கள் சிக்கன் இல்லை என கூறியதால், தகராறு செய்தனர். அங்கு மதுபோதையில் இருந்த மூன்று வாலிபர்கள், பிரசன்னா மற்றும் ஹேம்நாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்திரமடைந்த மூவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஹேம்நாத் மற்றும் பிரசன்னாவின் வயிறு, கால், மணிக்கட்டு ஆகிய இடங்களில் குத்தி விட்டு தப்பினர். சம்பவம் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.
கத்தியால் குத்தியது காந்திபுரத்தைச் சேர்ந்த ஹரி, பிரவீன், ஆதி ஆகியோர் என்பது தெரியவந்தது. ஹரி, ஆதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்; தப்பி ஓடிய பிரவீனை தேடுகின்றனர்.