ADDED : மார் 17, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
காரமடை: காரமடையில் கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
காரமடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சட்டத்திற்கு புறம்பாக 'கள்' விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டு 8 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த எட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, முதியவர் ஒருவரை கைது செய்தனர்.
