ADDED : பிப் 20, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சிஅருகே, கஞ்சா விற்பனை செய்த இருவரை கோமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, கஞ்சம்பட்டி பகுதியில் கோமங்கலம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், கருப்பம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல், 29, சிங்காநல்லுார் அகிலாண்டபுரத்தை சேர்ந்த சுபாஷ்,25 ஆகியோர் என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், 850 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
