ADDED : டிச 09, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : சுல்தான்பேட்டை அருகே கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
சுல்தான்பேட்டை போலீசார் நகரகளத்தை மற்றும் சித்தநாயக்கன் பாளையத்தில் ரோந்து சென்றனர். நகரகளத்தை எம்.ஜி.ஆர்., நகரில், பெட்டி கடை அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற, பெண்ணை நிறுத்தி, விசாரித்தனர். காட்டம்பட்டியை சேர்ந்த தங்கவேல் மனைவி ராஜாமணி, 56 என, தெரிந்தது.
அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், சித்தநாயக்கன்பாளையம் குட்டை அருகே கண்ணன், 25 என்ற நபர் கஞ்சா விற்கும் போது, போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.
ஒரு கிலோ, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கண்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.