/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்களில் வந்த 12.5 கிலோ கஞ்சா கடத்திய இருவர் சிறையிலடைப்பு
/
ரயில்களில் வந்த 12.5 கிலோ கஞ்சா கடத்திய இருவர் சிறையிலடைப்பு
ரயில்களில் வந்த 12.5 கிலோ கஞ்சா கடத்திய இருவர் சிறையிலடைப்பு
ரயில்களில் வந்த 12.5 கிலோ கஞ்சா கடத்திய இருவர் சிறையிலடைப்பு
ADDED : மே 27, 2025 10:24 PM
கோவை : ரயிலில் கடத்தி வரப்பட்ட, 12.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரை சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம், ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயில் ஒன்றில் பொதுப்பெட்டி அருகே, கோட்பாரின்றி பார்சல் ஒன்று கிடந்தது. பார்சலை கைப்பற்றிய போலீசார் பிரித்து பார்த்தனர். அதில், 7.5 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், முதல் நடைமேடையில் ரோந்து சென்ற போது, மேற்குவங்கத்தில் இருந்து வந்த ரயிலில் இருந்து இருவர் இறங்கினர். அவர்களை பிடித்த போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் மேற்குவங்கத்தை சேர்ந்த பெர்டாஸ், 25, லாலு, 24 எனத் தெரிந்தது.
அவர்களை சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் இருந்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இரு வழக்கிலும் கைப்பற்றப்பட்ட, 12.5 கிலோ கஞ்சாவின் மதிப்பு, ரூ.6.25 லட்சம்.